அல்லு அர்ஜுன், பஹத் பாசில் ஆகியோர் நடித்து இருக்கும் புஷ்பா 2 படத்தை தற்போது ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடி வருகிறார்கள். முதல் நாளே பெரிய அளவில் இந்த படம் வசூலை குவித்து வரும் நிலையில் படம் நிச்சயம் 1000 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என தெரிகிறது.
படத்தை பார்த்துவிட்டு பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் அட்லீ தற்போது புஷ்பா இரண்டாம் பாகம் பார்த்துவிட்டு ட்விட்டர் தளத்தில் பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.
அட்லீ பதிவு
“அல்லு அர்ஜுன் வாவ் சார்.. இந்த படம் என்னுடைய இதயத்தை தொட்டு விட்டது. உங்கள் நடிப்பு பிரமாதம். இன்னொரு பிளாக்பஸ்டர் படம் கொடுத்திருப்பதற்கு வாழ்த்துக்கள் சார். இயக்குனர் சுகுமார் மிக கடினமாக உழைத்து இருக்கிறார்.”
“மொத்த படக்குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். குறிப்பாக ராஷ்மிகா அவரது நடிப்பால் மிரட்டி இருக்கிறார். பகத் பாசில் நீங்க lethal bro” என அட்லீ கூறி இருக்கிறார்.
#pushpa2 @alluarjun Wow! sir. This movie really touched my heart. Your performance was outstanding. Congratulations on yet another blockbuster, sir! 🔥🔥🔥🔥🔥🔥
Congrats to @SukumarWritings bro, what hard work, bro! Loved your work. My wishes to the entire team. Special mention…— atlee (@Atlee_dir) December 5, 2024