Thursday, December 26, 2024
Homeசினிமாபெரிய ஹீரோ படம்.. 55 நாட்கள் நடந்த படப்பிடிப்பு.. நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு காத்திருந்த...

பெரிய ஹீரோ படம்.. 55 நாட்கள் நடந்த படப்பிடிப்பு.. நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு காத்திருந்த அதிர்ச்சி


பிரியா பவானி ஷங்கர்

தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். மேயதா மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து கடைசிக்குட்டி சிங்கம், மாஸ்ட்டர் என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்தார். சில படங்கள் இவர் நடித்த வரவேற்பை பெறாத காரணத்தினால், விமர்சனங்களையும் சந்தித்தார். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த டிமான்டி காலனி மாபெரும் வெற்றியை பிரியா பவானி ஷங்கருக்கு கொடுத்துள்ளது.

அதே போல், கடந்த வாரம் வெளிவந்த Black திரைப்படமும் சிறப்பாக இருக்கிறது என மக்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில், நடிகை பிரியா பவானி ஷங்கர் அளித்த பேட்டி ஒன்றில் வைரலாகி வருகிறது.

நடிகைக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்த பேட்டியில், “ஒரு பெரிய ஹீரோ படம், 55 நாட்கள் நான் ஷூட் பண்றேன், வெயில், மழை என படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு முடிந்து, டப்பிங்கில் போய் பார்த்தால் அரைநாள் தான் அதில் இருக்கிறது. என்னிடம் சொன்ன கதை என்ன, இங்க இருக்கிறது என்ன? என்ன வைத்து ஷூட் பண்ணதெல்லாம் எங்கே என்று கேட்டேன். அதெலாம் ம்யூசிக்-ல வரும் பாருங்க என்று கூறினார்கள்.

பெரிய ஹீரோ படம்.. 55 நாட்கள் நடந்த படப்பிடிப்பு.. நடிகை பிரியா பவானி ஷங்கருக்கு காத்திருந்த அதிர்ச்சி | Priya Bhavani Shankar Shocked In Big Hero Movie

எனக்கு ஒருமாதி பயங்கமா இருந்துச்சு. படிக்கிறது, கேட்கிறது எல்லாமே ஸ்க்ரீனில் வரும் என்று சொல்ல முடியாது. ஹீரோவுக்கு கால் செய்து கேட்டபோது நானே 135 நாள் ஷூட் போன என் சீனே இல்லைன்னு சொன்னாரு” என பிரியா பவானி ஷங்கர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments