Friday, September 20, 2024
Homeசினிமாபேச்சி: திரை விமர்சனம்

பேச்சி: திரை விமர்சனம்


காயத்ரி ஷங்கர், பால சரவணன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பேச்சி’ ஹாரர் திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.

கதைக்களம்



காயத்ரி ஷங்கர், தேவ் ராம்நாத் ஜோடி தங்கள் நண்பர்களுடன் கொல்லிமலையில் உள்ள ஒரு இடத்திற்கு சாகச சுற்றுலா செல்கின்றனர்.

அவர்களுக்கு உதவ உள்ளூர் Forest guide பால சரவணன் உடன் காட்டுப்பகுதிக்கு செல்கிறார்.



அங்கு நண்பர்கள் குழு தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்ல முற்படுகின்றனர். பால சரவணனின் எச்சரிக்கையும் மீறி இருவர் உள்ளே செல்கின்றனர்.



அதன் பின்னர் அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. அதில் இருந்து கதாநாயகன், கதாநாயகி உட்பட அனைவரும் தப்பினார்களா? அமானுஷ்ய சம்பவங்களுக்கு காரணம் என்ன? என்பதே மீதிக்கதை.  

படம் பற்றிய அலசல்



ராமச்சந்திரன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். ராஜேஷ் முருகேசனின் இசையும், பார்த்திபனின் ஒளிப்பதிவும் நம்மை காடு இருக்கும் ரம்ய பகுதிக்கு அழைத்துச் செல்கிறார்.

பேச்சி: திரை விமர்சனம் | Pechi Movie Review

சவுண்ட் எபக்ட்ஸ் சிறப்பாக அமைந்திருப்பதால் திகிலூட்டும் காட்சிகள் நம்மை மிரட்டுகின்றன.

முதல் பாதியில் கதாநாயகனுக்கு எந்த வேலையும் இல்லை.

அவரது நண்பர்களே அதிகம் ஸ்கோர் செய்தாலும், பல இடங்களில் அதிலும் சுவாரசியம் இல்லை. ஆனாலும், அவர்களுக்கு எதோ ஒன்று நடக்கப் போகிறது என்ற பதைபதைப்பதை பின்னணி இசையே கடத்துகிறது.

பேச்சி: திரை விமர்சனம் | Pechi Movie Review

இடைவேளை மற்றும் கிளைமேக்சில் வரும் ட்விஸ்ட் அருமை. நடிகர்களுக்கு பெரிதாக நடிப்பதற்கு காட்சிகள் அமைக்கப்படவில்லை.

பால சரவணன் மட்டுமே பல இடங்களில் நடிப்பில் அசத்துகிறார். அவர் கூறும் பிளாஷ்பேக் வித்தியாசம்.  

க்ளாப்ஸ்



திகில் காட்சிகள்


பின்னணி இசை, சவுண்ட் எபக்ட்ஸ்



கதைக்கரு



பல்ப்ஸ்



நடிப்பதற்கு பெரியதளவில் காட்சிகள் இல்லை



பல இடங்களில் சுவாரசியம் குறைவு



மொத்தத்தில் திகில் அனுபவத்தை பெற விரும்பும் பார்வையாளர்கள் இந்த பேச்சியை கண்டு களிக்கலாம். 

பேச்சி: திரை விமர்சனம் | Pechi Movie Review

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments