பிரபுதேவா, வேதிகா நடிப்பில் வெளியாகியுள்ள பேட்ட ராப் திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
சிறுவயதில் காதலன் திரைப்படத்தை பார்த்து பிரபு தேவாவின் தீவிர ரசிகராகிறார் பாலசுப்பிரமணியம்.
மேலும் பிரபுதேவாவைப் போல ஹீரோ ஆவதையே தனது லட்சியமாகக் கொண்டு அதற்காக முயற்சி செய்கிறார்.
பாலாவின் கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் கதை.
படம் பற்றிய அலசல்
பாலசுப்பிரமணியம் கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்திருக்கிறார்.
ஆனால், அவர் ஆடிசனுக்கு செல்லும் இடங்களில் ஒருவர் கூட ‘நீ பிரபுதேவா மாதிரியே இருக்கியே’ என்று கேட்கவில்லை.
[8K4S8 ]
இதுபோல் பல இடங்களில் லாஜிக் மீறல்கள்தான். ஒரு சில காட்சிகளில் ஹீரோ ஆக முடியவில்லையே என பிரபுதேவா வருத்தப்படுகிறார்.
அடுத்த காட்சியிலேயே காமெடியாக தனது இலட்சியத்தை கையாள்கிறார்.
இதனால் இது சீரியஸான படமா அல்லது காமெடி படமா என்ற குழப்பம் ஏற்படுகிறது.
வேதிகா நடனத்தில் அசத்தினாலும் நடிப்பதற்கு பெரிய ஸ்கோப் இல்லை.
ஒரு நேர்கோட்டில் இல்லாமல் திரைக்கதை எங்கெங்கோ செல்கிறது.
காமெடி காட்சிகள் ஒன்று கூட ஒர்க்அவுட் ஆகவில்லை. இயக்குநர் sj சினு பல இடங்களில் தடுமாறி இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.
சண்டைக்காட்சிகள் நன்றாக இருக்கிறது. கடைசி காட்சியில் இருக்கும் சர்ப்ரைஸ் ஆறுதல்.
க்ளாப்ஸ்
சண்டைக் காட்சிகள்
நடனம்
பல்ப்ஸ்
வலுவில்லாத திரைக்கதை
ஒர்க்அவுட் ஆகாத காமெடி
லாஜிக் மீறல்கள்