பொது சுகாதார பரிசோதகர்கள் என தங்களை அடையாளப்படுத்தி இடம்பெறும் மோசடி செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பணம் சம்பாதிக்கும் நோக்கில் இவ்வாறாான மோசடி செயற்பாடுகள் இடம்பெறுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை முதல் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.