Wednesday, March 26, 2025
Homeஇலங்கைபொலிஸ்மா அதிபரை பதவியிலிருந்து நீக்கும் பிரேரணை – சபாநாயகரிடம் கையளிப்பு

பொலிஸ்மா அதிபரை பதவியிலிருந்து நீக்கும் பிரேரணை – சபாநாயகரிடம் கையளிப்பு


பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணை முன்வைப்பதற்கான தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் இன்று (25) கையளிக்கப்பட்டது.

இதில் 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

2002ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 5வது பிரிவுக்கு அமைய இந்தத் தீர்மானம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பிரதியமைச்சர்களான மஹிந்த ஜயசிங்க, எரங்க குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌசல்யா ஆரியரத்ன மற்றும் உபுல் அபேவிக்ரம ஆகியோர் இந்தப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments