CLEAN SRI LANKA வேலைத்திட்டத்தின் ஊடாக, இலங்கை பொலிஸ் டிஜிட்டல் மயமாக்கும் ஒரு வேலைத்திட்டமாக, GovPay நிகழ்நிலை (Online) வசதி ஊடாக போக்குவரத்து விதிகளை மீறலுக்கான அபராத பணத்தைச் செலுத்துவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை நடைமுறையிலிருந்த திட்டத்தின் படி, ஒரு சாரதி வீதிப் போக்குவரத்து விதிகளை மீறினால், பொலிசாரால் வழங்கப்படும் தண்டனைச் சீட்டை தபால் நிலையத்தில் காண்பித்து அதில் குறிப்பிட்டுள்ள அபராத பணம் செலுத்தி அதன் ரசீதை மீண்டும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த பின்னர் மட்டுமே சாரதி அனுமதிப்பத்திரம் மீண்டும் வழங்கப்பட்டு வந்தது.
ஆயினும் GovPay செயலியினூடாக தண்டப் பணத்தைச் செலுத்தி, அப்பணம் செலுத்தப்பட்ட குறுஞ்செய்தியை (SMS) போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு காண்பித்து உறுதிப்படுத்தும் பட்சத்தில், அச்சந்தர்ப்பத்திலேயே சாரதி அனுமதிப்பத்திரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கமைய, இப்புதிய திட்டமானது 11.04.2025 முதல் 30.04.2025 வரை
குருணாகல்
தொரட்டியாவ
மெல்சிறிபுர
கொகரெல்ல
கலேவெல
தம்புள்ளை
மடாடுகம
மரதன்கடவல
கெக்கிராவை
திறப்பனை
கவரக்குளம்
அநுராதபுரம்
ஆகிய பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் ஊடாக ஏற்படும் குறைபாடுகளை கண்டறிந்து, அவற்றை சரிசெய்த பின்னர், நாடளாவிய ரீதியில் இலங்கை பொலிசாரால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.