விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதற்க்கு காரணம் ரோகிணி எப்போது மாட்டபோகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பதும், அதே போன்ற சம்பவங்களும் தொடர்ந்து சீரியலில் காட்டப்பட்டு வருவது தான்.
தனது மகன் கிரிஷ் பிறந்தநாளுக்கு ரோகிணி சென்ற நிலையில் அங்கு முத்து, மீனா இருவரும் வந்துவிடுகின்றனர். அதனால் ரோகிணி வழக்கம் போல ஓடி ஒளிந்துகொள்கிறார்.
அம்மா தான் அத்தை.. உண்மை தெரிஞ்சிபோச்சு
கிரிஷ் பார்ட்டியில் அம்மா, அத்தை என மாற்றி மாற்றி கூற முத்து – மீனாவுக்கு சந்தேகம் வருகிறது .அவர்கள் கிரிஷ் பாட்டியிடம் அது பற்றி கேட்கின்றனர்.
அவரும் தனது மகள் தான் தனக்கு குழந்தை இருப்பதை வெளியில் சொல்லாமல் மறைத்து வருகிறார் என்கிற உண்மையை சொல்லிவிடுகிறார்.
அதனால் முத்து மீனா அதிர்ச்சி ஆகின்றனர். மேலும் கிரிஷ்ஷை தத்தெடுத்து வளர்க்கலாமா என்றும் அவர்கள் பேசுகின்றனர். அப்படி நடந்தால் இனி ரோகிணி தப்பிக்கவே முடியாது என சீரியல் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ப்ரொமோவில் நீங்களே பாருங்க