நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன ராயன் படம் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று நல்ல வசூலை குவித்து வருகிறது. தனுஷின் 50வது படம் இது என்ற நிலையில் ஹிட் ஆகி இருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் தனுஷ் இன்று தனது 41 வயதை தொடும் நிலையில் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
தனுஷ் வீட்டின் முன் கூடிய ரசிகர்கள்
நடிகர் தனுஷ் புதிதாக போயஸ் கார்டனில் கட்டி இருக்கும் பிரம்மாண்ட வீட்டின் முன்பு இன்று ரசிகர்கள் கூடி இருந்தனர்.
வெளியில் வந்த தனுஷ் அவரது ரசிகர்களை சந்தித்து கைகொடுத்து நன்றி கூறி இருக்கிறார். அந்த வீடியோ இதோ.