தனுஷ்
தமிழ் சினிமாவில் பிஸி நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார் தனுஷ். தனது 50வது படமான ராயன் வருகிற ஜூலை மாதம் 26ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார்.
தற்போது தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.
அடுத்ததாக இளையராஜாவின் பயோபிக் படத்திலும் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். மேலும் ஆனந்த் எல் ராய், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் படங்களை லைன் அப் வைத்திருக்கிறார்.
சம்பளம்
இந்நிலையில் தனுஷ், மேலும் ஒரு சென்சேஷனல் இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ளாராம். அந்த இயக்குனர் வேறு யாருமில்லை போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா தான்.
இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இப்படத்திற்காக தனுஷ் 45 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.