சிறகடிக்க ஆசை
மனோஜ் ஏமாந்த பணத்தை சரிசெய்ய மீனாவின் நகையை விற்று தனது பிரச்சனையை முடித்துள்ளார், இதற்கு விஜயா துணையாக இருந்துள்ளார்.
இந்த விஷயத்தை விஜயா, மனோஜ் யாருக்கும் தெரியாது என கெத்தாக சுற்றுகிறார்கள். முத்து கடைசியில் போலி நகை என அசிங்கப்படுத்த அந்த கோபத்தில் மனோஜை கேட்ட அவர் கிளம்புகிறார்.
ஆனால் மீனா, பாட்டியின் விசேஷம் முடியட்டும் அதுவரை பிரச்சனை செய்ய வேண்டாம் என முத்துவை சமாதானம் செய்கிறார்.
நாளைய புரொமோ
தனது கோபத்தை கட்டுப்படுத்தி வீட்டிற்கு எதுவும் நடக்காதது போல் வருகிறார்.
ஆனால் மனோஜ், முத்து பார்க்கும் பார்வையில் திருதிருவென்று முழிக்கிறார். இப்படி இன்றைய எபிசோட் செல்ல நாளைய எபிசோடின் புரொமோ வெளியாகியுள்ளது.
அதில் பாட்டி வீட்டிற்கு வந்து குடும்பத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார்.
அண்ணாமலை உங்களுக்கு பேரன்கள் ஸ்பெஷல் பரிசு கொடுக்க போகிறார்கள் என்று கூற அவரும் சிறப்பான பரிசு கொடுப்பவர்களுக்கு நானும் ஒன்று கொடுக்கப்போகிறேன் என கூறுகிறார். இதோ நாளைய எபிசோட் புரொமோ,