நடிகர் விஜய் படம் என்றாலே வசூல் மாபெரும் அளவில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லியோ படம் கூட ரூ. 598 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.
GOAT
இதனால் GOAT படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். வெங்கட் பிரபு – விஜய் கூட்டணி அதிலும் யுவன் ஷங்கர் ராஜா இசை, அதுமட்டுமின்றி டீ ஏஜிங் என பல எதிர்பார்ப்புகள் இப்படத்தின் மீது இருக்கிறது.
சமீபத்தில் வெளிவந்த பாடல் ரசிகர்களிடையே விமர்சனங்களை சந்தித்தாலும், படத்தின் மீது படக்குழு அதீத நம்பிக்கையில் இருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த விஜய் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் என்றும் திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
ப்ரீ புக்கிங்
இந்த நிலையில், வெளிநாட்டில் GOAT திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கியுள்ளது. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது UK-வில் துவங்கி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இதுவரை பல லட்சங்களை வசூல் செய்துவிட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.