விஜய் சேதுபதி
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மகாராஜா.
நித்திலன் இயக்கத்தில் உருவாகி வெளியான இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
சமூக அக்கறையோடு வித்தியாசமான திரைக்கதையின் மூலம் அசத்தினார் இயக்குனர் நித்திலன். மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள இப்படம் ஒரே வாரத்திற்குள் உலகளவில் ரூ. 58 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்த வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதியை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தங்களுடைய அடுத்த படத்திற்காக கமிட் செய்துள்ளது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளாராம்.
சம்பளம்
இந்த நிலையில், இதுவரை ரூ. 15 கோடி முதல் ரூ. 17 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த விஜய் சேதுபதி, புதிதாக ஹீரோவாக கமிட்டாகியிருக்கும் இப்படத்திற்காக ரூ. 10 கோடி தான் சம்பளமாக வாங்கவுள்ளார் என பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.
மகாராஜா எனும் மாபெரும் வெற்றிக்கு பின் கூட தனது சம்பளத்தை அதிகரிக்காமல், அதனை குறைத்துக்கொண்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.