குக் வித் கோமாளி 5
தொகுப்பாளினி மணிமேகலை போட்ட ஒரே ஒரு வீடியோ இப்போது காட்டுத் தீ போல் பரவி பரபரப்பாக பேசப்படுகிறது.
பலரும் இந்த பிரச்சனை குறித்து பேச, அந்த நிகழ்ச்சியில் இருந்த சிலர் மணிமேகலை-பிரியங்கா குறித்த பிரச்சனை குறித்து பேசி வருகிறார்கள்.
குரேஷி, சுனிதா, புகழ் என பலர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனை குறித்து தங்களது கருத்தை தெரிவித்துவிட்டனர்.
அன்ஷிதா பதிவு
இந்த நிலையில் குக் வித் கோமாளி 5 கோமாளிகளில் ஒருவராக இருந்த சீரியல் நடிகையுமான அன்ஷிதா இந்த பிரச்சனை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் போட்ட பதிவில், ஒரு போட்டியாளர் சக போட்டியாளரை பற்றி பேசினால் தவறில்லை. ஒரு தொகுப்பாளர், போட்டியாளராக இருப்பவர் சக போட்டியாளரை பற்றி பேசினால் தவறாக பேசப்படுகிறது.
இதில் என்ன தவறு இருக்கிறது, யாரையும் குறை கூறும் அவசியமில்லை. அனைவரும் அவர்களுக்கு பிடித்த வேலைகளை செய்கிறார்கள், அதேசமயம் மற்றவர்களிடம் இருக்கும் நல்ல விஷயத்தையும் மறக்க கூடாது என பதிவு செய்துள்ளார்.