பிக் பாஸ் சண்டைகளை மிஞ்சும் அளவுக்கு மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே குக் வித் கோமாளி ஷோவினுள் சண்டை நடந்து இருப்பது தான் தற்போது இணையத்தில் பெரிய பேசுபொருளாக மாறி இருக்கிறார்.
மணிமேகலைக்கு ஆதரவாக பலரும், பிரியங்காவுக்கு ஆதரவாக சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சண்டைக்கு காரணம் சுஜிதா
மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே சண்டை தொடங்கியது எந்த இடத்தில் என வீடியோவை நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர். சுஜிதா தான் சண்டை தொடங்க காரணம் என குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
மணிமேகலை தொகுத்து வழங்குவது சரியில்லை, விஜய் டிவியின் சீனியர் தொகுப்பாளர் பிரியங்கா குக் வித் கோமாளி நடுவர்களுக்கு எப்படி வரவேற்பு கொடுத்து இருப்பார் என சுஜிதா சொல்ல, அதற்கு பிறகு பிரியங்கா தொகுப்பாளராகவே மாறி ஷோவை கையில் எடுத்துக்கொள்வது போல செய்வார்.
மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே இருந்த சின்ன உரசல் இந்த இடத்தில் தான் பெரிய பகையாக மாறி இருக்கும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
Oho.. Idhaan sandai aarambicha edam pola #CookwithComali5 #Manimegalai #Priyankapic.twitter.com/lPXez9aX58
— VCD (@VCDtweets) September 18, 2024