நெப்போலியன்
தமிழ் சினிமாவில் பல டாப் வெற்றிப்படங்களை கொடுத்துவிட்டு இப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகியிருப்பவர் நடிகர் நெப்போலியன்.
பாரதிராஜாவால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்ட இவர் அரசியலிலும் ஒரு ரவுண்டு வந்துள்ளார்.
இவரது மூத்த மகன் தனுஷிற்கு தசை சிதைவு நோய் இருப்பதால் குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆனார், தற்போது அவருக்கு திருமணமும் நடத்தி வைக்க உள்ளார்.
தனுஷின் திருமணம் ஜப்பானில் நடக்கவுள்ள நிலையில் தற்போது குடும்பத்துடன் ஜப்பான் சென்றுள்ளார் நெப்போலியன்.
விமர்சனம், வேண்டுகோள்
தனுஷால் விமானத்தில் பயணிக்க முடியாது, எனவே திருமணத்திற்கு கப்பலில் சென்றிருக்கிறார். அவருக்கு திருமணம் ஏன், அவரால் ஒரு பெண்ணின் வாழ்க்கை சீரழியப்போகிறது என நிறைய விமர்சனங்கள் வந்தன.
இந்த விமர்சனங்கள் குறித்து நெப்போலியன், உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்யாதீர்கள்.
உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். ஒரு பக்க சொல் ஒரு யானை பலம், எல்லோரையும் வாழ்த்துங்கள். மனதை நோகடிக்காதீர்கள், வாழ் விடுங்கள் என நெப்போலியன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.