பிக் பாஸ் 8ம் சீசனில் தற்போது ஃபிரீஸ் டாஸ்க் தொடங்கிவிட்டது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் தற்போது வீட்டுக்குள் வந்து சந்திக்க தொடங்கி இருப்பதால் ஷோ எமோஷ்னலாக மாறி இருக்கிறது.
இன்றைய எபிசோடில் முதலில் தீபக்கின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் வந்திருந்தனர்.
கண்ணீர் விட்டு கதறிய தீபக்
தீபக் தூங்கிக்கொண்டிருக்கும்போதே அவர் மனைவி மற்றும் மகன் இருவரும் வீட்டுக்குள் வந்து அவரது பெட் அருகில் சென்று சர்ப்ரைஸ் கொடுக்கின்றனர்.
அதற்கு பிறகு அவர்கள் உடன் தனியாக பேசிய தீபக் கதறி அழுதுவிட்டார். தான் இந்த வீட்டில் lonely ஆக அதிக நேரம் உணர்ந்ததாக கூறி அழுதிருக்கிறார் தீபக்.
அவரது மனைவி அவருக்கு ஆறுதல் சொல்லி, அவர் சிறப்பாக போட்டியை விளையாடுவதாக சொல்லி பாசிட்டிவ் ஆக பேசி இருக்கிறார்.
“கடைசியாக என் அப்பா செத்தபோது தான் அழுதேன். இப்படி அழுததே இல்லை” என சொல்லி நீண்ட நேரம் கண்ணீர் விட்டார் தீபக்.