பிக்பாஸ் 8
குபு சிகு குபு சிகு என்று தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு பல வருடங்களுக்கு முன்பு பரீட்சயமான நிகழ்ச்சி பிக்பாஸ்.
கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க தொடர்ந்து 7 சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்துவிட்டது.
7வது சீசனில் தான் நிறைய புதுபுது மாற்றங்கள், அதிலும் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா டைட்டில் ஜெயித்தது எல்லாம் வேற லெவல் சம்பவம்.
அந்த சீசன் முடிவடைந்ததில் இருந்தே ரசிகர்கள் 8வது சீசன் குறித்து பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்த 8வது சீசனில் இருந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கப்போவது இல்லை, விஜய் சேதுபதி தான், அவர் இடம்பெறும் புரொமோ கூட அண்மையில் தான் வெளியானது.
போட்டியாளர்கள்
8வது சீசனில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்களின் லிஸ்ட் நிறைய சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் உண்மையிலேயே யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்பது தெரியவில்லை.
இந்த நிலையில் சீரியல் நடிகர் அர்னவ், அன்ஷிதா இருவரும் பிக்பாஸ் வரப்போவதாக கூறப்படுகிறது. அர்னவ் தனது மனைவி திவ்யாவுடன் பிரச்சனையில் ஈடுபட்டு ஜெயில் எல்லாம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வரும் தர்ஷா குப்தா, பாரதி கண்ணம்மா தொடர் மூலம் வில்லியாக கலக்கிய பரீனா, காத்து கருப்பு கலை மற்றும் பிசியோதெரபிஸ்ட் திவாகர் ஆகியோர் பிக்பாஸ் 8ல் வரலாம் என்ற புது லிஸ்ட் வலம் வருகிறது.