சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரில் மீனாவின் தங்க நகைகள் கவரிங் ஆனது எப்படி என்ற கதைக்களம் ஓடிக் கொண்டிருக்கிறது.
மனோஜை காப்பாற்ற விஜயா செய்த இந்த காரியம் வீட்டில் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.
முத்து கவரிங் நகை மாறியதற்கு மனோஜ் தான் காரணம் என்பதை உறுதியாக நம்புகிறார், ஆனால் ஆதாரம் சிக்கவில்லை என்ற குழப்பத்திலேயே சுற்றி வருகிறார்.
விஜயாவின் தோழி பார்வதிக்கு எல்லா விஷயமும் கண்டிப்பாக தெரியும் என முத்து-மீனா அவரிடம் பேச்சு கொடுக்க அவர் சில வார்த்தைகளை விடுகிறார், இதனால் முத்துவின் சந்தேகம் அதிகமாகிறது.
அதிரடி புரொமோ
இந்த நிலையில் மனோஜ் போலீஸ் நிலையத்தில் தான் ஏமாந்த பொருட்கள் பற்றி கேட்க அப்போது வீட்டில் கணக்கு காட்டிய விஷயத்தை எல்லாம் கூறுகிறார்.
அப்போது எதிர்ப்பாராத விதமாக ஒரு விஷயத்தால் முத்து கைதாக அங்கே அவருக்கு மனோஜ் எதிராக ஆதாரம் சிக்குகிறது.
அந்த வீடியோவை அவர் வீட்டில் போட்டுக்காட்டுகிறார், ரோஹினி ஷாக் ஆகிறார்.
இதோ அந்த பரபரப்பு புரொமோ,