Thursday, March 27, 2025
Homeசினிமாமனோஜ் பாரதிராஜா மரணம்! அஞ்சலி செலுத்திய திரையுலக பிரபலங்கள்..

மனோஜ் பாரதிராஜா மரணம்! அஞ்சலி செலுத்திய திரையுலக பிரபலங்கள்..


மனோஜ் பாரதிராஜா

1976 செப்டம்பர் 11ஆம் தேதி பாரதிராஜா – சந்திரலீலா தம்பதிக்கு மகனாக பிறந்தவர் மனோஜ் பாரதிராஜா. தமிழ் சினிமாவில் தனது தந்தை பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மகால்’ படம் மூலம் 1999ல் ஹீரோவாக அறிமுகமானார்.

தொடர்ந்து படங்கள் நடித்து வந்த இவர், ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் வாய்மை, ஈஸ்வரன், மாநாடு போன்ற படங்களில் நடித்து வந்தார். மேலும் ‘மார்கழி திங்கள்’ எனும் திரைப்படத்தை கடைசியாக இவர் இயக்கியிருந்தார்.

அஞ்சலி செலுத்திய நட்சத்திரங்கள்

இந்த நிலையில், நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். இவருடைய இறப்பு திரையுலகில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இளையராஜா தனது இரங்கலை வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார்.

மனோஜ் பாரதிராஜா மரணம்! அஞ்சலி செலுத்திய திரையுலக பிரபலங்கள்.. | Film Stars Pay Condolence To Manoj Bharathiraja

மேலும் வெங்கட் பிரபு, கமல் ஹாசன் ஆகியோர் எக்ஸ் தளத்தில் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். இயக்குநர், நடிகர், அரசியல்வாதி சீமான் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் நடிகர்கள் சூர்யா, கார்த்தி நேரில் சென்று மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments