தமிழ் சினிமாவில் எப்படி ரஜினி-கமலோ, அப்படி ஒரு நல்ல நட்புடன் முன்னணி நடிகர்களாக மலையாள சினிமாவை ஆண்டு வருகிறார்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி.
இவர்களின் படங்கள் வெளியாகி இப்போதும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது, விரைவில் அதாவது வரும் மார்ச் 27ம் தேதி ப்ருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் எம்புரான் படம் வெளியாக உள்ளது.
அந்த படத்திற்கான புரொமோஷன் வேலைகள் படு சூடாக நடந்து வருகிறது.
மோகன்லால்
சமீபத்தில் மோகன்லால் சபரிமலை சென்று பிரார்த்தனை செய்தார். அவர் தனது நண்பர் மம்முட்டி உடல்நலம் நன்றாக வேண்டும் என பிராத்தனை செய்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்து மோகன்லால் ஒரு நிகழ்ச்சியில், மம்முட்டி என் நண்பர், சகோதரர், யாரோ ஒருவர் அர்ச்சனை சீட்டை இணையத்தில் பரப்பிவிட்டார். அவருக்காக நான் பிரார்த்தனை செய்ததை பொதுவெளியில் பேச விரும்பவில்லை.
அவர் நலமுடன் இருக்கிறார், நமக்கெல்லாம் ஏற்படும் உடல் பிரச்சனைகள் போல அவருக்கும் சின்ன பிரச்சனை அவ்வளவு தான் என கூறியுள்ளார்.