நடிகை ஆல்யா மானசா சின்னத்திரையில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். அவர் விஜய் டிவியில் ராஜா ராணி மற்றும் அதன் இரண்டாம் பாகம் சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
அதன் பின் சன் டிவிக்கு சென்ற அவர் தற்போது இனியா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் அவரது கணவர் சஞ்சீவ் சன் டிவியில் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கையில் காயம்
ஆல்யா மானசா கடந்த வருடம் ஒரு ஷோவில் கலந்துகொண்ட போது அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அதன் பின் பல மாதங்கள் ஓய்வு எடுத்து தான் சரியானார்.
தற்போது ஆல்யாவின் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. கையில் கட்டுடன் இருக்கும் வீடியோவை அவர் வெளியிட்டு இருக்கிறார். ‘மறுபடியுமா’ என அவரே வருத்தமாக குறிப்பிட்டு இருக்கிறார்.
அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.