நடிகை சௌந்தர்யா
90ஸ் காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா.
இவர் கன்னடத்தில் வெளிவந்த கந்தர்வா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
கார்த்தி நடிப்பில் வெளிவந்த பொன்னுமணி படத்தின் மூலம் தாம் தமிழில் அறிமுகமானார்.
இப்படத்தில் இடம்பெறும் ‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா’ பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று.
இதன்பின் ரஜினிகாந்த், கமல், சத்யராஜ் என பலரும் இணைந்து நடித்தார்.
திரையுலகின் உச்சத்தில் இருந்த நடிகை சௌந்தர்யா, 2004ஆம் ஆண்டு விமான பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் காலமானார். இவர் மரணமடையும் போது 7 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார் என சொல்லப்படுகிறது.
சௌந்தர்யாவின் திருமண வீடியோ
நடிகை சௌந்தர்யா 2003ஆம் ஆண்டு ரகு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமண புகைப்படங்களை ரசிகர்கள் பலரும் பார்த்திருக்கக்கூடும், ஆனால் வீடியோவை பார்த்திருக்க பெரிதும் வாய்ப்பில்லை. இந்த நிலையில், தற்போது சௌந்தர்யாவின் திருமண வீடியோ வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ பாருங்க..