ப்ருத்விராஜ்
தமிழ் சினிமா படங்கள் எடுத்துக் கொண்டால் இதில் எல்லா மொழிகளில் பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.
அப்படி மலையாள நடிகர் என்றாலும் தமிழில் சிறந்த படங்களில் நடித்து இங்கேயும் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றிருப்பவர் நடிகர் ப்ருத்விராஜ்.
இவரது நடிப்பில் கடைசியாக ஆடுஜீவிதம் என்ற படம் வெளியாக அவரது நடிப்பிற்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்தார்கள்.
அடுத்தடுத்து ப்ருத்விராஜின் படங்களுக்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
சொத்து மதிப்பு
இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடும் ப்ருத்விராஜ் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஒரு படத்திற்கு குறைந்தது ரூ. 4 கோடி முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கும் இவரது சொத்து மதிப்பு ரூ. 54 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
கேரளாவின் கொச்சியில் ஒரு ஆடம்பர பங்களாவில் வசிக்கும் நடிகர் பிரித்விராஜ், சமீபத்தில் மும்பையின் பாந்த்ராவில் ரூ.17 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு குடியிருப்பை சொந்தமாக வாங்கியதாக செய்திகள் வலம் வந்தன.