Thursday, December 26, 2024
Homeசினிமாமாடர்ன் உடை வேண்டாம், எப்போதும் சேலையில் வருவது ஏன்.. சாய் பல்லவி சொன்ன பதில்

மாடர்ன் உடை வேண்டாம், எப்போதும் சேலையில் வருவது ஏன்.. சாய் பல்லவி சொன்ன பதில்


நடிகை சாய் பல்லவிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவரது நடிப்பு மற்றும் ஹோம்லி லுக்கிற்காகவே அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர்.

டாக்டர் படிப்பை முடித்து இருந்தாலும் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தால் அவர் நடிப்பை தொடர்ந்து வருகிறார்.

எப்போதும் சேலையில் வருவது ஏன்

சாய் பல்லவி எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும், பேட்டி கொடுக்க வந்தாலும் சேலையில் தான் வருவார். அவர் மாடர்ன் உடைகளை புறக்கணித்து எப்போதும் சேலையில் வருவது ஏன் என ஒரு பேட்டியில் கேட்டிருக்கின்றனர்.

“எனக்கு சேலை தான் comfortable ஆக இருக்கிறது. ஒரு இடத்தில் பேச வேண்டும் என்றால் என்ன பேச வேண்டும் என தான் யோசிக்க வேண்டும். உடையை பற்றி அந்த நேரத்தில் யோசித்துக்கொண்டிருக்க கூடாது. அதனால் தான் எனக்கு comfortable ஆக இருக்கும் சேலையில்  வருகிறேன்” என அவர் கூறி இருக்கிறார்.

மாடர்ன் உடை வேண்டாம், எப்போதும் சேலையில் வருவது ஏன்.. சாய் பல்லவி சொன்ன பதில் | Why Sai Pallavi Always Comes In Saree

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments