மாத்தறை, தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாயில் தலைமறைவாக இருக்கும் ‘பலே மல்லி ‘ என்ற ஷெஹான் சத்சர என்ற நபர் கொலையின் பின்னணியில் உள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தெவினுவர, கபுகம்புர பகுதியி வீடொன்றில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு திரும்பிய போதே 29 வயதான இளைஞர்கள் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.