மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுகங்கை காப்புக்காடு பகுதியில் பயணப்பொதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கி மற்றும் 02 தோட்டாக்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 02 பைகளில் இந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் நேற்று (29) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த இடத்தில் T56 துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய நாடளாவிய ரீதியில் செயற்படும் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.