சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் GOAT. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இப்படத்தில் தளபதி விஜய் நடித்திருந்தார்.
வெங்கட் பிரபு மாநாடு
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. சென்னை 28, சரோஜா, மங்காத்தா, மாநாடு என பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த மாநாடு திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
சிம்பு – எஸ்.ஜே. சூர்யா – வெங்கட் பிரபு மூவருடைய திரை வாழ்க்கையிலும் முக்கிய திருப்பு முனையாகவும் இப்படம் அமைந்தது. குறிப்பாக இப்படத்தில் வில்லனாக நடித்து நம் அனைவரையும் அசரவைத்திருந்தார். நகைச்சுவையாகவும், வில்லன்தாத்திலும் இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்பது நடித்திருந்தார்.
முதலில் நடிக்கவிருந்த நடிகர்
இந்த நிலையில், மாநாடு படத்தில் எஸ்.ஜே. சூர்யா ஏற்று நடித்திருந்த இந்த கதாபாத்திரத்தில், முதன் முதலில் நடிப்பதாக இருந்தவர் நடிகர் அரவிந்த் சாமி தானாம். கதை கேட்டு அவருக்கு பிடித்துப்போய்விட்டது. ஆனால், கால்ஷீட் இல்லாத காரணத்தினால் இப்படத்தில் அரவிந்த் சாமியால் இப்படத்தில் நடிக்கமுடியாமல் போய்விட்டது.
இந்த தகவலை நடிகர் அரவிந்த் சாமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.