ராயன் படம்
நடிகர் தனுஷின் 50வது திரைப்படமான ராயன் நேற்று (ஜுலை 26) படு மாஸாக வெளியாகி இருந்தது.
இந்த படத்தை அவரே இயக்கி, நடித்துள்ளதால் மிகவும் ஸ்பெஷலாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. படம் பார்த்த அனைவரும் தனுஷையும் படத்தையும் பாராட்டி வருகின்றனர்.
நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராக ராயன் படத்தில் தனுஷ் பக்காவாக தெரிகிறார் என்பது ரசிகர்களின் பாராட்டாக உள்ளது.
பட வசூல்
ராயன் திரைப்படம் முன்பதிவிலேயே அதிக வசூலை ஈட்டிய நிலையில் முதல் நாள் வசூலில் சாதனை படைத்துள்ளது. தனுஷ் திரைப்பயணத்தில் முதல்நான் அதிக வசூலை ஈட்டிய படமாக ராயன் அமைந்துள்ளது.
முதல் நாள் முடிவில் ராயன் படம் உலகம் முழுவதும் ரூ. 17.5 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம்.