நாட்டாமை
கே.எஸ்.ரவிக்குமார் அவரது சினிமா பயணத்தில் நிறைய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார், அதில் ஒன்று தான் நாட்டாமை.
கடந்த 1994ம் ஆண்டு சரத்குமார் ஹீரோவான நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது. சரத்குமாருக்கு ஜோடியாக குஷ்பு, மீனா ஆகியோர் நடித்திருந்தனர், சிற்பி இசையமைத்து இருந்தார்.
ரிலீஸ் ஆகி பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய இப்படம் படு பிளாக்பஸ்டர் ஹிட் படமானது, சரத்குமாரின் மார்க்கெட்டும் உயர்ந்தது.
முதலில் கதையை மும்முட்டியிடம் கூற அவர் வேறொரு படத்தில் பிஸியாக இருக்க பார்த்திபனிடம் கதை சென்றுள்ளது, அவரும் அதே காரணத்தை கூறியுள்ளார். பின்பு கடைசியாக தான் சரத்குமாரிடம் நாட்டாமை கதை சென்றுள்ளது.
ரஜினி
செம பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்த இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்றால் நம்புவீர்களா, ஆனால் அது உண்மை தான்.
அதாவது தமிழில் இப்படம் செம ஹிட்டடிக்க தெலுங்கில் மோகன்பாபு நடிக்க உருவாகியுள்ளது.
சரத்குமார் கதாபாத்திரத்தில் மோகன்பாபு நடிக்க, அவரின் தந்தையாக அதாவது விஜயகுமார் நடித்த கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார்.
பெத்தராயுடு என்ற பெயரில் இப்படம் கடந்த 1995ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.