சில்லுக்கருப்பட்டி புகழ் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘மின்மினி‘ திரைப்படத்தின் விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
கதைக்களம்
நட்பு தொடங்கும் முன் பிரிவு ஏற்படுவதால், தன்னை நண்பனாக ஏற்றுக்கொண்ட சக பள்ளி மாணவனின் கனவை நோக்கி ஹீரோ பயணிக்கிறார்.
அவருக்கு தெரியாமலேயே சக பயணியாக வழியில் இணைந்துகொள்ளும் ஹீரோயின், தன்னைப் பற்றிய விஷயங்களை கூறாமலேயே இமாலயாவில் டிராவல் செய்கிறார்.
ஹீரோவுக்கு ஹீரோயின் குறித்த உண்மை தெரிந்ததா? அவர்கள் தங்கள் பயணத்தில் என்னென்ன அனுபவத்தை பெற்றார்கள் என்பதே படத்தின் கதை.
படம் பற்றிய அலசல்
பள்ளிக்கூடத்தில் படித்து வரும் பாரி, சபரி என்ற இரு சிறுவர்களைப் பற்றி படம் துவங்குகிறது. புதிதாக பள்ளியில் சேரும் சபரியை கிண்டல் செய்து, தொல்லை கொடுக்கிறார் சிறுவன் பாரி.
ஒரு கட்டத்தில் சபரியின் நல்ல குணங்களைக் கண்டு அவனிடம் நட்பனாக முயற்சிக்கிறார். ஆனால், பள்ளி வேனில் மாணவர்கள் ட்ரிப் செல்லும்போது நடக்கும் சம்பவம் சபரியின் இலக்கை மாற்றுகிறது.
பாரியாக நடித்திருக்கும் கௌரவ் காளை துறுதுறுப்பான செயல்களால் நம்மை கவர்கிறார்.
அதேபோல் பாரி வம்பிழுக்கும் போதெல்லாம் பொறுத்துக்கொண்டு தன் வழியில் செல்லும் பிரவீன் கிஷோரின் (சபரி) நடிப்பும் அருமை.
முதல் பாதியில் வரும் பள்ளிக்கூடம் சம்பந்தப்பட்ட காட்சிகள் நம்மையும் நமது பருவ நாட்களுக்கு அழைத்துச் செல்கிறது.
பிரவீனாவாக வரும் எஸ்தருக்கு இரண்டாம் பாதியில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். இமாலயாவை நோக்கி இருவரும் பயணிக்கும்போது அவர்களுக்கு பெரிய அளவில் பிரச்சனைகள் எதுவும் வரவில்லை என்பது சுவாரஸ்யம் குறைவு.
மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கத்திஜாவின் இசை கதையுடன் இழையோடுகிறது.
ஹீரோ, ஹீரோயினை சிறுவயதில் படமாக்கிவிட்டு 8 ஆண்டுகள் காத்திருந்து இரண்டாம் பாதியை எடுத்த இயக்குநர் ஹலிதா ஷமீமின் முயற்சியை பாராட்டலாம்.
ஆனால், இரண்டாம் பாதியில் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான காட்சிகள் இல்லாததால் நம் பொறுமையை மிகவும் சோதிக்கிறது.
ரோடு ரைட், பைக் டிராவல் செய்ய விரும்புபவர்களுக்கு இரண்டாம் பாதி கவரலாம்.
க்ளாப்ஸ்
படத்தின் ஒளிப்பதிவு
இயக்குனரின் புதிய முயற்சி
பின்னணி இசை
பல்ப்ஸ்
விறுவிறுப்பான காட்சிகள் இல்லாத இரண்டாம் பாதி
அழுத்தம் இல்லாத சில காட்சிகள்