விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி அவர் அம்மா ஈஸ்வரியை திட்டி வீட்டை விட்டு வெளியில் அனுப்பிவிடுகிறார். ராதிகாவை தள்ளிவிட்டது அவர் தான் என கோபியும் நம்பிவிட்டார்.
அவர் கண்ணீருடன் வீட்டை விட்டு வெளியேற, பாக்யா அவரை தன் வீட்டுக்கு அழைத்து செல்கிறார். அங்கு சென்று ஈஸ்வரி அழுது புலம்பி கதறுகிறார்.
அடுத்து வருவது
கோபியாக நடித்து வரும் சதிஷ் தற்போது லேட்டஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் குடிப்பது போல தான் காட்சிகள் வருகிறதாம்.
“சரக்கு தான். கோபி மறுபடியும் சரக்கு அடிக்க ஸ்டார்ட் பண்ணி ஆச்சு. பார் செட்டப்.. ஃபுல் பாட்டில். என்னெல்லாம் நடக்க போகுதோ” என அவர் பதிவிட்டு இருக்கிறார். போட்டோ இதோ.