சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது முத்துவிடம் இருந்த மீனாவின் தம்பி சத்யா குறித்த வீடியோவை விஜயாவிடம் காட்டவிட்டார் ரோகிணி.
கோபத்தில் விஜயா
தனது நகையை கொள்ளையடித்தது மீனாவின் தம்பி என தெரிந்து கடும் கோபமடைந்த விஜயா, நேராக மீனாவின் வீட்டிற்கு சென்று அவருடைய தம்பி சத்யா அடி வெளுத்துவிட்டார்.
அப்போது ‘என் தம்பியை காரணம் இல்லாமல் ஏன் இப்படி அடிக்கிறீங்க’ என மீனா கேட்க, ஆதாரமாக இருக்கும் அந்த வீடியோவை மீனாவிடம் காட்டுகிறார்கள். தனது தம்பி ஒரு திருடனாக இருந்துள்ளான் என அறிந்ததும் மனமுடைந்து போகிறார் மீனா.
பின் மீனாவிடம் இனி நீ என் வீட்டிற்கு வரக்கூடாது என கோபமாக கூறிவிட்டு சென்றுவிடுகிறார் விஜயா. இதன்பின் சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.