விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களை தாண்டி சீரியல்களுக்கும் இப்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
சிறகடிக்க ஆசை, மகாநதி, அய்யனார் துணை போன்ற சீரியல்களுக்கு இப்போது ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.
நேரம் மாற்றம்
தொடர்கள் பல வெற்றியின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்க இன்று ஒரு சீரியல் முடிவுக்கு வந்துள்ளது.
நாம் ஏற்கெனவே அறிவித்தது போல் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பனிவிழும் மலர்வனம் சீரியல் இன்றோடு முடிந்துவிட்டது. இதனால் அந்த நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் மறுஒளிபரப்பு ஆக உள்ளதாம்.
அதேபோல் அய்யனார் துணை சீரியலும் காலை 10.30 மணிக்கு மறுஒளிபரப்பு ஆகிறதாம்.