விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் தற்போது டாப் 5 டிஆர்பி ரேட்டிங்கில் கூட இடம் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றன.
சன் டிவி சீரியல்கள் தான் தொடர்ந்து தற்போது முன்னணியில் இருந்து வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியல் முடிகிறதா?
இந்நிலையில் விஜய் டிவியில் கடந்த பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிக்கப்பட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த சீரியல் விரைவில் முடியப்போகிறது என பாக்கியலட்சுமியின் மாமனார் கதாபாத்திரம் இறப்பது போல காட்சிகள் வந்தபோது, அதில் நடித்து இருந்த STP ரோசரி தெரிவித்து இருந்தார்.
கடந்த சில மாதங்களாக பாக்கியலட்சுமி சீரியல் ரேட்டிங் அதளபாதாளத்தில் இருப்பதால் அதை முடிக்க விஜய் டிவி முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.