சின்னத்திரை நடிகைகள் தான் இப்போது ரசிகர்களின் பேவரெட் நாயகிகளாக உள்ளனர்.
அன்றாடம் அவர்களை பார்ப்பதால் அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை மிகவும் ஆர்வமாக கவனிக்கிறார்கள் ரசிகர்கள்.
அப்படி ஒரு நடிகை இப்போது தனது வாழ்க்கையில் நடந்த சோகமான விஷயம் குறித்து பேட்டியில் பேசியுள்ளார்.
பானுமதி
எங்க அண்ணா, இனியா, சின்ன மருமகள் போன்ற பல சீரியல்களில் நடித்து வருபவர் தான் நடிகை பானுமதி.
இவர் சமீபத்தில் தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்கள் குறித்து முதன்முறையாக பகிர்ந்துள்ளார். அதில் அவர், எனக்கு டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது.
16 வயதில் திருமணம் ஆனது, 10 வருடம் என் வாழ்க்கை நன்றாக சென்றது, 2 ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். அதிக குடித்து வந்தவர் மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்தார்.
எனது கணவர் வீட்டில் நான் தான் அவரை கொன்றுவிட்டேன் என்றனர், பின் அவர்கள் உறவே வேண்டாம் என என் அம்மா, அப்பா என வந்துவிட்டேன்.
குடும்பத்திற்காகவும், அவர்களின் சாப்பாட்டுக்காகவும் சினிமாவில் துணை நடிகையாக ரூ. 500 சம்பளத்தில் நடிக்க வந்தேன்.
குழந்தைகளுக்காக நான் மீண்டும் 2வது திருமணம் செய்தேன், அந்த வாழ்க்கையும் சரியாக அமையவில்லை, அதிலும் ஏமாற்றம் தான். என் குடும்பத்திற்காக ஓட ஆரம்பித்தேன், எனது மகன்களை நான் நல்லபடியாக வளர்த்திருக்கிறேன் என எமோஷ்னலாக பேசியுள்ளார்.