மாரி செல்வராஜ்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். பெரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி, முதல் படத்திலேயே தனக்கான இடத்தையும் பிடித்தார்.
அடுத்ததாக தனுஷுடன் இணைந்து கர்ணன் எனும் படைப்பை வழங்கினார். மேலும் கடந்த ஆண்டு மாமன்னன் எனும் படத்தை நமக்கு கொடுத்தார். தொடர்ந்து வெற்றிப்படங்களை இயக்கி வரும் மாரி செல்வராஜின் படைப்பில் அடுத்ததாக வெளிவந்த திரைப்படம் தான் வாழை.
நேற்று உலகளவில் திரையரங்கில் வெளிவந்த வாழை படத்தை இயக்கியது மட்டுமின்றி, அப்படத்தை தயாரித்தும் இருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
வசூல்
படம் பார்த்தவர்களின் மனதை தொட்ட இப்படம் முதல் நாள் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் ஓப்பனிங் என பார்க்கப்படுகிறது.
இனி வரும் நாட்களிலும் இப்படம் எந்த அளவிற்கு வசூல் செய்யப்போகிறது என்று நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.