முத்து படம்
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, ரகுவரன், சரத்பாபு, ராதாரவி, செந்தில் மற்றும் வடிவேலு என 90ஸ் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து 1995ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் முத்து.
ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே செம ஹிட் தான்.
குடும்பம், காதல், காமெடி, சென்டிமென்ட் திரைக்கதையில் உருவாகி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
குறிப்பாக இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்காமல் இருக்கிறது.
நடிகை சுபஸ்ரீ
இந்த திரைப்படத்தில் பத்மினி கதாபாத்திரத்தில் நடிகை சுபஸ்ரீ நடித்திருப்பார். இவர் தமிழில் ஜென்டில்மேன் மற்றும் முத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.
90ஸ் காலகட்டத்தில் நடிகையாக வலம் வந்த இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்திருப்பார்.
பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து கொண்டார்.
இந்நிலையில், நடிகை சுபஸ்ரீயின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.