சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியின் நம்பர் 1 தொடராக ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் டாப் சீரியல்களின் டிஆர்பியில் முதல் இடத்தை பிடிக்க கதையும் அடுத்தடுத்து சுவாரஸ்யமாக இருந்து வருகிறது.
இப்போது கதையில் நகை பிரச்சனை ஒருவழியாக முடிந்துள்ளது, அடுத்து ஸ்ருதி குழந்தை பெற்றுக்கொள்ளும் பிரச்சனை வரும் என தெரிகிறது.
இன்னொரு பக்கம் மனோஜ் கைக்கு கிடைத்த கடிதம் யார் அனுப்பியது என்ன பிரச்சனை வரப்போகிறது என்பது தெரியவில்லை.
நாளைய எபிசோட்
முத்து-மீனா 2வதாக புதிய கார் வாங்கி அதனை ஓட்ட ஒரு நபரையும் போட்டுள்ளனர்.
நாளைய எபிசோட்
புரொமோவில் முத்து-மீனா ஒரு உண்டியுடன் வீட்டிற்கு வர விஜயா அதனை பார்த்து இது நடக்கும் என நினைத்தேன் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என நினைக்கவில்லை என கூற அண்ணாமலை என்ன என்று கேட்கிறார்.
அதற்கு விஜயா அதான் தெருதெருவாக பிச்சை எடுத்து வீட்டு கட்ட போறாங்களா என கேட்க உடனே மனோஜ் வாசலில் பிச்சை எடுப்பது போல் அம்மா என கூப்பிடுகிறார்.
உடனே முத்து, அம்மா சொன்னது சரி தான் பிச்சைக்காரன் வந்துட்டான் என முத்து கூறுகிறார், விஜயா ஷாக் ஆகிறார்.