எச் வினோத்
இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைக்கதை எழுத்தாளர் எச்.வினோத்.
பல வெற்றி படங்களை கொடுத்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் கோலி சோடா படத்தில் ஆர்.பார்த்தீபன் மற்றும் விஜய் மில்டனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
மனோபாலா தயாரிப்பில் 2014- ல் சதுரங்க வேட்டை என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, எச்.வினோத் கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தினை இயக்கினார்.
இந்த இரண்டு படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் என்ற பட்டத்தை சம்பாதித்தார்.
இதை தொடர்ந்து, முன்னணி கதாநாயகனான அஜித்தை வைத்து துணிவு, நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற சிறந்த படங்களை இயக்கினார்.
சொத்து மதிப்பு
அடுத்து விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவர இருக்கும் தளபதி – 69 படத்தை எச்.வினோத் இயக்க போவதாக இணையத்தில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தனது 42 – வது பிறந்தநாளை கொண்டாடும் எச்.வினோத் சொத்து மதிப்பு ரூ.150 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.