Thursday, April 3, 2025
Homeஇலங்கைமுன்னாள் ஜனாதிபதி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை


மியான்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இராணுவம் உட்பட மருத்துவக் குழுவை அங்கு அனுப்புமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மியான்மருக்கும் இலங்கைக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதாகவும், அந்த நாட்டில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்க மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்களை அனுப்புமாறு அரசாங்கத்திற்கு முன்மொழிவதாகவும் அவர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த அறிக்கையில்,

“2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ​​நாங்கள் இராணுவக் குழுவை அனுப்பினோம்.

இந்தியாவிற்குப் பிறகு இலங்கை இரண்டாவது பெரிய நன்கொடையாளராக இருந்தது.

இன்று, இந்தியா, தாய்லாந்து, மலேசியா, சீனா மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள அவுஸ்திரேலியா கூட மியான்மருக்கு உதவிகளை அனுப்பியுள்ளன.

இராணுவ மருத்துவப் படையைச் சேர்ந்த மருத்துவர்கள் உட்பட ஒரு குழுவை உடனடியாக மியான்மருக்கு அனுப்பி, அவர்களுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி, மியான்மரில் ஒரு தற்காலிக மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்பதே எனது முன்மொழிவு.

அதுமட்டுமல்லாமல், கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் அவர்களுக்குத் தேவையான மருந்துகளைச் சேகரித்து அங்கு அனுப்ப முடியும்.

கடந்த ஆண்டு, காசாவிற்கு இலங்கையிலிருந்து ஒரு மில்லியன் டொலர்களை நான் வழங்கினேன்.

எனவே, இந்த விடயத்தில் நாமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் அரசாங்கத்திற்கு முன்மொழிகிறேன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments