லூசிஃபர் 2: எம்புரான்
மலையாள திரையுலகில் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லாலின் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் லூசிஃபர் 2: எம்புரான்.
கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
நடிகரும், இயக்குநருமான பிரித்விராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முன்பதிவு
இந்த நிலையில், லூசிஃபர் 2: எம்புரான் முன்பதிவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் முன்பதிவில் மட்டுமே ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம், இதுவரை மலையாள சினிமா கண்டிராத வசூல் வேட்டையை தற்போது எம்புரான் திரைப்படம் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.