மல்டிபிளக்ஸ் வளர்ச்சிக்கு பிறகு பழைய திரையரங்குகள் மீது மக்கள் பெரும் கவனம் செலுத்துவது இல்லை. அதற்கு முக்கிய காரணம் தற்போது பல புதுவகையான திரையரங்குகள் வருகை தந்தது தான்.
உதயம் தியேட்டர்
அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமான சென்னையின் முக்கிய அடையாளமாக விளங்கிவந்த உதயம் தியேட்டர் விரைவில் மூடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அசோக் நகரின் அடையாள சின்னமாக விளங்கும் உதயம் தியேட்டர் 1983 – யில் 750 பேர் வரை அமர்ந்து ரசிக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்ட இந்த திரையரங்கத்தில் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களின் படங்கள் கடந்த 40 ஆண்டுகளாக திரையிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வேட்டையன் படத்துடன் உதயம் திரையரங்கம் மூடப்பட உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தற்போது, இந்த தகவல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.