தேவரா
தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட இவரின் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் தேவரா.
இப்படத்தை பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கியிருந்தார். மேலும் பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகியான ஜான்வி கபூர், தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகியுள்ள திரைப்படமும் இதுவே ஆகும்.
வசூல் சாதனை
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் கூட, வசூலில் சாதனை படைத்து வருகிறது. முதல் நாளே உலகளவில் ரூ. 172 கோடி வரை வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தனர்.
அதை தொடர்ந்து தற்போது 3 நாட்களை கடந்துள்ள தேவரா திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளது.
மூன்றே நாட்களில் ரூ. 304 கோடியை கடந்துள்ள தேவரா திரைப்படம் விரைவில் பாகுபலி முதல் பாகத்தின் வசூல் ரூ. 650 கோடியை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.