மகாராஜா
நடிகர்களின் வாழ்க்கையில் அவர்களுடைய 50வது படம் என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள மகாராஜா அவருடைய 50வது திரைப்படமாகும்.
இதனால் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர். இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அனுராக் காய்ஷப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட நாட்கள் கழித்து விஜய் சேதுபதிக்கு ஹீரோவாக மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல்
இந்த நிலையில், மூன்று நாட்களில் உலகளவில் மகாராஜா திரைப்படம் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எந்த அளவிற்கு வசூல் செய்யப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.
You May Like This Video