பிரியங்கா மோகன்
தமிழ் சினிமாவின் சென்சேஷன் நாயகியாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா மோகன்.
அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து ஹிட் படங்களையும் கொடுத்து வருகிறார்.
கடைசியாக நானியுடன் இவர் தெலுங்கில் நடித்த Saripodhaa Sanivaaram வெளியாகி நல்ல ஹிட்டடித்தது.
விபத்து
இந்த நிலையில் நடிகை பிரியங்கா மோகன் Torrurல் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார்.
பின் கடைக்கு முன் அமைக்கப்பட்ட மேடையில் ஏறி ரசிகர்களை சந்தித்தார். அப்போது எதிர்ப்பாராத விதமாக மேடை கீழே விழுந்துள்ளது, இதனால் அங்கு பரபரப்பு நிலவியுள்ளது.
ஆனால் அந்த விபத்தில் தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்றும் காயம்பட்ட மற்றவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாக பதிவு போட்டுள்ளார்.