யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இணைமருத்துவ விஞ்ஞான பீட மாணவர்கள் இன்று புதன்கிழமை (26) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இணைமருத்துவ விஞ்ஞான பீட மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலிலிருந்து பேரணியாக யாழ்.நகருக்கு செல்ல முற்பட்ட நிலையில் பொலிஸார் அதற்கு இடமளிக்கவில்லை.
இதனையடுத்து மாணவர்கள் தி ருநெல்வேலி சந்திக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இலவசக்கல்வி இணைமருத்துவ விஞ்ஞானப் பட்டதாரிகளை தவிர்த்து தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களை இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.