நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். மீடியாவில் இருந்து விலகியே இருந்தாலும், ரசிகர் மன்றங்கள் எதுவும் வேண்டாம் என கலைத்துவிட்ட பிறகும் அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் அப்படியே தான் இருக்கிறது.
தற்போது விடாமுயற்சி பட ஷூட்டிங்கில் மீண்டும் இணைந்து இருக்கும் அஜித் குமார், முழு ஷூட்டிங்கையும் ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.
வீடியோ கால்
அஜித் தற்போது ரசிகர் ஒருவருடன் வீடியோ காலில் பேசி இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி இருக்கிறது.
அஜித் அங்கிள் என ரசிகரின் குழந்தையும் பேச, ‘ஹாய் கண்ணா’ என கூறி அஜித் பேசி இருக்கிறார்.