யூடியூப்
ஒரு காலத்தில் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தான் ஒரு கலைஞன் தனது திறமையை காட்ட பாதையாக இருந்தது.
ஆனால் இப்போதெல்லாம் அப்படி கிடையாது, யூடியூப் என்ற ஒரு சமூக வலைதளம் எத்தனையோ கலைஞர்களை வளர்த்துவிட்டது. அப்படி நாம் இப்போது யூடியூப் பக்கம் திறந்ததன் மூலம் பிரபலமான ஒருவரை பற்றி தான் பார்க்க போகிறாம்.
சதீஷ்-தீபா
இவர்கள் யார் என்பது புகைப்படம் பார்த்ததும் கண்டுபிடித்திருப்பீர்கள், சதீஷ்-தீபா தான். இவர்கள் சதீஷ்-தீபா என்ற யூடியூப் பக்கத்தை கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி தொடங்கியுள்ளனர்.
இதுவரை மொத்தமாக 1560 வீடியோக்ள் வரை பதிவிட்டுள்ள இவர்களின் பக்கத்திற்கு 2.48 மில்லியன் Subscribers உள்ளனர். மொத்தமாக இவர்கள் பதிவிட்ட வீடியோக்களுக்கு 2,320,861,219 Views வந்துள்ளது.
அறிமுகம்
சதீஷ் ஒரு சிவில் இன்ஜினியர் சிறுவயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் கொண்டதால் 2015-16ல் மியூசிகலியில் நான் விளையாட்டாக வீடியோக்கள் பதிவிட ஆரம்பித்தேன்.
எனது மனைவியுடன் என்னுடய் சேர்ந்து வீடியோக்கள் செய்வார், அந்த நேரத்தில் டிக்டாக் தடை செய்யப்பட்ட போது எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
யூடியூப்பில் சின்ன சின்ன வீடியோக்களை பதிவிட கொஞ்சம் கொஞ்சமாக குறும்படங்கள் எல்லாம் வந்தன. நாட்கள் செல்ல செல்ல யூடியூபிற்கு ரீச் கிடைக்க மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் வந்தனர் என்று அவர்களது ஆரம்பம் குறித்து கூறியிருக்கிறார்கள்.
யூடியூப் கான்செப்ட்
பலதரப்பட்ட இடங்களில் நிகழ்வதையும், பார்ப்பதையும் வைத்து தான் வீடியோவை உருவாக்குகிறோம்.
வீடுகளில் அன்றாடம் நடக்கும் விஷயங்கள், எங்கள் வீட்டில் நடக்கும் விஷயங்கள், நண்பர்கள் அவர்கள் வீடுகளில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள், குடித்து விட்டு வீட்டுக்கு வருவது, அதனால் ஏற்படும் பிரச்னைகள் என சுற்றியிருக்கும் சம்பங்கள் தான் என்னுடைய கான்செப்ட் என்கிறார்.
திருமணம்
கணவன்-மனைவி இருவரும் வீடியோ வெளியிட்டு செம பிரபலம் ஆகிவிட்டனர். இவர்களது திருமணம் காதல் கல்யாணம் தானாம்.
10ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே காதலித்தோம் வந்தோம், பக்கத்து வீட்டு பெண் தான் தீபா, சாதிமறுப்பு திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் செய்துள்ளார்களாம்.
வருமானம்
சதீஷ் – தீபா இருவருமே தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு தான் இருக்கின்றனர். அவர்கள் கிடைக்கும் free டைமில் தான் இந்த வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர். இதன் மூலமாக அவர்களுக்கு மாதம் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக தெரிகிறது.
Youtube மட்டுமின்றி, கடைகளுக்கு ப்ரோமோஷன் வீடியோக்கள், விளம்பரங்கள் போன்றவற்றின் மூலமும் அவர்கள் வருமானம் ஈட்டுவது குறிப்பிடத்தக்கது.