Thursday, December 12, 2024
Homeசினிமாரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தளபதி விஜய்.. பதிவு இதோ

ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தளபதி விஜய்.. பதிவு இதோ


ரஜினிகாந்தின் பிறந்தநாள்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாள் இன்று.

ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய், தனது எக்ஸ் தளத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவை வெளியிட்டுள்ளார்.

வாழ்த்து தெரிவித்த விஜய்

இந்த பதிவில், “பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என கூறியுள்ளார்.

ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தளபதி விஜய்.. பதிவு இதோ | Tvk Leader Vijay Wishes To Rajinikanth Birthday

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு, அரசியல் கட்சி தலைவராக விஜய் தெரிவித்துள்ள வாழ்த்து, தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments